விபத்தில் சிக்கியவர்களை மீட்ட பொதுமக்களை நேரில் அழைத்து பாராட்டிய எஸ்.பி. மூர்த்தி

0 382
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு சுற்றுலா தளம் அருகே கடந்த 11.10.2021ம் தேதி காலை 06:30 மணி அளவில், சுமார் 20 நபர்களை ஏற்றிக்கொண்டு திருச்சியிலிருந்து கரூர் மார்க்கமாக சென்ற மார்கோபோலோ வேனை அதன் ஓட்டுநர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாக இயக்கி சென்றபோது, அவ்வழியே சென்ற அரசு பேருந்து மற்றும் சிறிய வகை கண்டைனர் லாரி ஆகியவற்றின் மீது மோதி தானாக சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

அவ்விபத்தில் வேனில் பயணம் செய்த 16 நபர்களும் காயங்களுடன் வேனிற்குள் சிக்கித் தவித்ததைகண்ட, விபத்துப் பகுதிக்கு அருகில் வசித்துவந்த பொதுப்பணித்துறை ஊழியர்களும், பொதுமக்களும், நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணிபுரிந்த காவலர்களும் துரிதமாக செயல்பட்டு விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் காயம் பட்டவர்களை மீட்டு அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து நடந்த சிறிது நேரத்தில் காயம் பட்டவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்ததால் அவர்கள் அனைவரும் உயிர்சேதமின்றி தப்பித்தனர்.

இவ்வாறு காவல்துறையினருடன் பொதுமக்கள் இணைந்து மனிதாபிமானத்துடன் செயல்பட்டு விபத்து ஏற்பட்ட சில மணித்துளிகளில் காயம் பட்டவர்களை மீட்டதை, அப்பகுதி பொதுமக்களும், சாலையில் பயணம் செய்த பயணிகளும், காயம் பட்டவர்களும் மனதாரப் பாராட்டினார்கள். இக்குழுவினரின் செய்கையை பாராட்டி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி விபத்தில் உதவியவர்களை நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.