எஸ்.ஆர். எம் கல்வி வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா

0 383
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் இருங்கலூர் ஊராட்சியில் அமைந்துள்ள எஸ்.ஆர். எம் கல்வி வளாகத்தில் எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா எஸ்.ஆர்.எம் ராமாபுரம் மற்றும் திருச்சி வளாக தலைவர் டாக்டர் ஆர்.சிவக்குமார் ஆலோசனையின் பேரில் எஸ்.ஆர். எம் திருச்சி மற்றும் ராமாபுரம் வளாக முதன்மை இயக்குநர் டாக்டர் சேதுராமன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மலர்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும்,
தன்னம்பிக்கை பேச்சாளருமான டாக்டர் பரமன் பச்சைமுத்து சிறப்புரை ஆற்றினார்
மாணவர்கள் பயிலும் காலங்களில் சிறந்த ஆரோக்கியம் பேண வேண்டும் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்,கல்லூரி புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட வெளி உலகை நிகழ்வுகளை தெரிந்து கொள்ள கூடிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும், தைரியமாக எதையும் எதிர்கொள்ள தயாராக வேண்டும் என தன்னம்பிக்கை கருத்துகளை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் எஸ்.ஆர். எம் திருச்சி வளாக தலைவர் டாக்டர் என். மால் முருகன் மற்றும் பேராசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.