திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய காவல் ஆயுதப் படை, தேசிய புலனாய்வு மற்றும் அதிரடிப்படையில் பொதுப்பிரிவில் காவலா் பணியிடம் மற்றும் அசாம் ரைபில்ஸ்-ல் பொதுப்பிரிவில், ரைபில் காவலர் பணியிடங்களுக்கான எஸ்.எஸ்.சி. தேர்வாணையம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் படைவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மொத்த காலிப் பணியிடங்கள் 25 ஆயிரத்து 271, குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு ஆகும். வருகிற 31-ந் தேதி விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகும். https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரர்கள் அவர்கள் விவரத்தினை திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.