ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ பூதநாயகி அம்மன் கோவிலில் சந்தன காப்பு அலங்காரம்
திருச்சி, ஜூலை 29 துவரங்குறிச்சி ஸ்ரீ பூதநாயகி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருள்மிகு பூதநாயகி அம்மன் ஆலயத்தில் நேற்று ஆடி பூரத்தை முன்னிட்டு துவரங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள், பெண்கள் என பெருந்திரளானனோர் கலந்து கொண்டனர்.
ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து அம்மன் அருளைப் பெற்றுச் சென்றனர். மேலும் வந்திருந்த பெண்களுக்கு வளையல் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.