மணப்பாறையில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

0 291
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 1 திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொள்ள 176 தூய்மையப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 69 பேர் நிரந்தர பணியாளர்களாகவும், 107 பேர் ஒப்பந்த பணியாளர்களாகவும் பணிபுரிகின்றனர். இந்நிலையில் தற்போது நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்தும், திடீரென 38 ஒப்பந்த பணியாளர்களை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்தும், பணிச்சுமை அதிகரிப்பதைக் கண்டித்தும், ஒப்பந்த பணியாளர்களிடம் குப்பையை எடை போட்டு அதற்கு தகுந்தார் போல் சம்பளம் நிர்ணயிக்கும் முறையை கைவிட வேண்டும். நகராட்சி சட்டப்படி ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் பேருந்து நிலையம் மற்றும் விராலிமலை ரோடு ஆகிய பகுதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.