திருச்சி விமான நிலையத்தில் ரூ.72 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி ஜீன்1 திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூர் மற்றும் கொழும்பு வழியாக துபாயில் இருந்து இரண்டு விமானங்கள் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இரண்டு ஆண் பயணிகளிடமும், ஒரு பெண் பயணியிடமும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
அவர்களில் ஆண் பயணகள் இருவரும் தங்கத்தை உடலில் மறைத்தும், பெண் பயணி தன்னுடைய உடைமையில் மறைத்தும் கொண்டுவந்துள்ளனர். ஆண் பயணிகள் கொண்டுவந்த தங்கம் பசை வடிவில் இருந்ததால், அதிகாரிகள் அவற்றை உருக்கி தங்கத்தை தனியாக பிரித்து எடுத்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் 1197.5கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 72லட்சத்து 73ஆயிரத்து 781 ரூபாய் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். மேலும் 3 பயணிகளிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.