அரசு பேருந்து மோதி பள்ளி சிறுவன் படுகாயம்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அட்டலாப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் ரித்தீஷ் ( 8) இவர் முசிறியிலுள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார், வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து தனது சகோதரி சுதர்சனா என்பவருடன் முசிறி துறையூர் சாலையில் காளியம்மன் கோவில் அருகே உள் பஸ் நிருத்தத்திற்க்கு நடந்து வந்தபோது திருச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் சிறுவன் மீது மோதியதில் சிறுவன் பலத்த காயமடைந்தார். காயமடைந்த சிறுவன் ரித்தீஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் துறையூர் சாலையில் உள்ள காளியம்மன் கோவில் பஸ் ஸ்டாப்பில் இருந்து தனியார் பள்ளி வரை சாலையின் இரு புறமும் வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்பினால் பாதசாரிகள் நடந்து செல்ல கூட இடம் இருக்காது இதனால் தான் தொடர் விபத்தானது இந்த இடங்களில் நடந்து வருகின்றன. மேலும் துறையூர் சாலையில் ஸ்டேட் பாங்க் வங்கி, இந்தியன் வங்கி, கோட்டாட்சியர் அலுவலகம், தனியார் துவக்கப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக் பள்ளி என பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியாக உள்ளது. இதனால் வணிக நிறுவனங்களுக்கு பார்சல் இறக்க வரும் கனராக வாகனங்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிக்காமல் முக்கிய நேரங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து இடையூறு செய்வதும், வணிக கடைகளுக்கு வரும் இருசக்கர வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்துவதும், அதிவேகமாக செல்லும் தனியார் பேருந்து மற்றும் இளைஞர்களின் பைக் ரேஸ் என எதையுமே போக்குவரத்து காவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் விடுவதால் தான் தொடர் விபத்துக்கு காரணம். மேலும் காளியம்மன் கோயில் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றாமல் அருகில் உள்ள கைகாட்டி, தனியார் பள்ளி ஸ்டாப்பில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ரித்தீஷ்-ன் தந்தை முத்துசாமி முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜேந்திரன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்