திருச்சி அருகே பள்ளி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

0 16
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 1  திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பழங்காவேரி பாரதி நகரை சேர்ந்தவர் சிலம்பரசன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் மனைவி இலக்கியா(37). அவர்களது மகன் ரோஷன்(16). இவர் முக்கொம்பு அருகிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் கிருத்திக் ரோசன் தூங்க சென்றார். அதிகாலையில் தாய் இலக்கியா மகனை எழுப்புவதற்காக சென்றபோது, அங்கு அவர் இல்லை. குழப்பமடைந்த இலக்கியா மாடியில் சென்று பார்த்தவர் அதிர்ச்சிடைந்தார். மொட்டை மாடியில் போட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் கூறை உத்தரத்தில், சேலையால் துாக்கு மாட்டி தற்கொலை தொங்கிக் கொண்டிருந்துள்ளார். உடன் இலக்கியா அலறிய சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து மாணவன் உடலை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.