மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி

0 317
Stalin trichy visit

திருச்சி தென்னூர் புதுமாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் காளியப்பன். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் கோபால்(வயது 15). இவர் தில்லைநகரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கோபால் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று மாலை அவருடைய தந்தை வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

அப்போது வீட்டில் கோபால் கடுமையான காய்ச்சலால் இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.