விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு தண்ணீர் அமைப்பு, ரயில்வே தொழிலாளர்கள் சார்பில் வரவேற்பு
திருச்சி, அக்.9 சந்திரயான் 3 திட்ட இயக்குனரும், ரயில்வே தொழிலாளர் மற்றும் ரயில்வே தொழிற்சங்க தலைவர் பி.பழனி வேல் மகனுமான விஞ்ஞானி ப.வீரமுத்துவேல் 07.10.23 அன்று திருச்சிக்கு வருகை புரிந்த போது மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு மற்றும் ரயில்வே தொழிலாளர்கள் சார்பில் மாலை அணிவித்து , பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகள் வழங்கி வரவேற்கப்பட்டது.
இதில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம் ,ரயில்வே தொழிற்சங்க தலைவர்கள் ஐான்சன், விஜயகுமார், திருச்சி மாவட்ட எச்.எம்.எஸ். தலைவரும் கவுன்சிலருமான கோ.ரமேஷ், மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர். இளங்கோ, ஆர்.கே.ராஜா, நீ.வெங்கடேஷ், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.
விஞ்ஞானி ப.வீரமுத்துவேல் அவரிடம் துணிப்பை கொடுத்து விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.