தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

0 398
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 14. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்த குற்றத்திற்காக சென்னை உணவு பாதுகாப்புத்துறை ஆணையர், திருச்சி காவல்துறை ஆய்வாளர்கள் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு அவரச தடையாணை அறிவிப்பின் மூலம் அதவத்தூர் எஸ்.எல்.எஸ்.மளிகை, வியாழன்மேடு சரவணாமளிகை, திருச்சி புத்தூர் ஜி.இ.லட்சுமி தேநீர் கடை, சண்முகாநகர் சிறீராம் ஸ்டோர் ஆகிய நான்கு கடைகளுக்கு சீல்வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு மருத்துவமனை காவல் உதவி ஆய்வாளர் புகழேந்தி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இப்ராகிம், வடிவேல், ஸ்டாலின், வசந்தன், சண்முகசுந்தரம், ஜஸ்டின், பாண்டி, ரங்கநாதன், பொன்ராஜ், அன்புச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு கூறுகையில் திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருடக்ளை விற்பனை செய்வோர் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.