திருவெறும்பூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் : 3 பேர் கைது
திருச்சி, மே 22 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே குட்கா பான் மசாலா விற்பனைக்கு வைத்திருந்த மூன்று பேரை திருச்சி எஸ்பி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதோடு அவர்களிடமிருந்து 60 கிலோமதிப்பிலான குட்கா பான் மசாலா, கார் ரோகம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
திருவெறும்பூர் பகுதியில் வீடு மற்றும் கடைகளில் ஹான்ஸ் கூல்லீப், விமல் பாக்கு உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்காக வைத்திருப்பதாக திருச்சி எஸ்பி தனி படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் நேற்று திருச்சி வேங்கூர் நடராஜபுரம் சாலை அசோக் நகர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் சரவணன் (53) இவர் வீட்டில் வைத்திருந்த 9 கிலோ கான்ஸ், 6கிலோ கூல்லீப், விமல் பாக்கு 23 கிலோவி ஒன் புகையிலை 2.3கிலோ மற்றும் மாருதி கார், செல்போன், ரூ 49 ஆயிரம் 100 ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர்.
அதேப்போல் திருவெறும்பூர் மேல குமரேசபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சைமன் மகன் ஸ்டீபன் (50) என்வர் கடையில் இருந்து 17.4 கிலோ கான்ஸ் கூல் லீப் 2.4 கிலோ, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் மற்றும் கடையில் இருந்த துவாக்குடி வடக்கு மலை அண்ணா வளைவு பெரியார் மணியம்மை நகரை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் காமராஜ் (29) ஆகிய மூன்று பேரை கைது செய்துதிருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனடிப்படையில் அவர்கள் மூன்று பேரும் மீதும் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.