திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
திருச்சி, மே 22 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள புலிவலம் அருகே உள்ளது ஈச்சம்பட்டி கிராமம் இங்கு ஏசி மெக்கானிக்காக பணிபுரிபவர் பிரபு. இவருக்கு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி அவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.
இவர் நேற்று அந்தப் பகுதியிலிருந்த பெரியசாமி தோட்டத்தில் உள்ள கிணற்று மேட்டில் ஆட்டுக்கு இலைதழை பறித்தாராம். அப்போது திவ்யா கிணற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். தொடர்ந்து துறையூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் தீயணைப்புத் துறையினர் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் சுமார் ஒரு மணி நேரம் தேடுதல் போராட்டத்திற்கு பிறகு திவ்யா சடலமாக தீயணைப்புத் துறையினர் வீட்டு புலிவலம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
திவ்யாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக உடலை துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெண் உயிரிழந்த சம்பவம் இப்பகுதிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது