புதைவடிகால் திட்டப்பணி : அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்
திருச்சி, செப். 13 திருச்சி மாநகராட்சி வார்டு எண் 25 உய்யகொண்டான் திருமலை, செல்வ நகர் பகுதியில் ரூ. 230.61 கோடி மதிப்பீட்டில் அம்ருத் திட்டத்தின் கீழ் புதை வடிகால் திட்ட பணிகளுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு கே .என் .நேரு அடிக்கல் நாட்டி, திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர்மா. பிரதீப் குமார் , மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் , நகர பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.