பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு : பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் கைது

0 176
Stalin trichy visit

திருச்சி, செப். 13திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் கைது செய்யப்பட்டார். தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் காவலர் உடையுடன் வந்தநபர் தனது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் தராமல் தகராறில் ஈடுபட்டார்.
இதையடுத்து ஊழியர்கள் அந்த நபரை பிடித்து தொட்டியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சேலம் சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த மாதவன் மகன்மணிகண்டன்(45) என்பதும்,கடந்த 2002ஆம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்வு பெற்று பல்வேறு காவல்நிலையங்களில் காவலராக பணிபுரிந்தவர் என்பதும் தெரிந்தது. மேலும், மதுபோதையில் பணிக்கு வந்தது உள்ளிட்ட காரணங்களால் கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டவர் எனவும் தெரியவந்தது. இதனையடுத்து மணிகண்டனை தொட்டியம் காவல்துறைனிர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.