புகையிலை பொருட்கள் – போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேர் கைது

0 33
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 23 திருச்சி கண்டோன் மெண்ட் பகுதியில் புகையிலைபொருட்கள் விற்றதாக மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தசிவகுமார் (49), திருச்சி அரசு மருத்துவமனை பகுதி யில் புகையிலை விற்ற இனாம் புலியூர் பகுதியை சேர்ந்த ராமசந்திரன் (52) ஆகிய 2 பேரை போலீசார் கைதுசெய்து,அவர்களிடம் இருந்து 160 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த தினேஷ் (27), கே.கே.நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற மன்னார்புரம் பகுதியை சேர்ந்த ஈஸ்வர் (21), கீழ தேவ தானம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற சஞ்சீவி நகரை சேர்ந்த கவுதம்(20), சிந் தாமணி பகுதியை சேர்ந்த குரு (20) ஆகிய 4 பேரை போலீ சார். சார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 134 போதை மாத்திரைகள் பறிமுதல் செய் யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.