ஓட்டுநரை தாக்கிய காரை கடத்தியவர் கைது
திருச்சி, ஜூலை 23 சவாரி செல்வது போன்று நடித்து திருச்சி டிரைவரை தாக்கி கார் கடத்தல்
வாலிபர் கைது
திருச்சி, ஜூலை 23 திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த புலிவனம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). வாடகை கார் டிரைவர். இவரிடம், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த சிஜாபதி (33), போடியை அடுத்த அம்மாபட்டியை சேர்ந்த வினோத்குமார் ஆகி யோர் திருச்சி மாவட்டம் தண்டல்புதூரில் இருந்து திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு சவாரி செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காரில் ஏற்றிக் கொண்டு கார்த்திக் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். தாடிக்கொம்பு அருகே காமாட்சிபுரம் பகுதியில் கார் வந்தபோது, சிஜாபதியும், வினோத்குமாரும் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கார்த்திக்கிடம் கூறினர். இதனால் அவர் சாலையோரமாக காரை நிறுத்தினார். சிறிது நேரத்தில் சிஜாபதியும், வினோத்குமாரும் சேர்ந்து கார்த்திக்கை சரமாரியாக தாக்கிவிட்டு காரை கடத்திச்சென்றனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் கார் கடத்தப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் தங்களது விசாரணையை முடுக்கி விட்டனர். அதில், காரை கடத்திய சிஜாபதி திண்டுக்கல் நந்தவனப்பட்டி அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் அங்கு விரைந்து சென்று, சிஜாபதியை கைது செய்தனர். அவரிடமிருந்து கார் மீட்கப்பட்டது. மேலும் தப்பிஓடிய வினோத்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.