தந்தை இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை

0 323
Stalin trichy visit

திருச்சி ஏப்.12 திருவரங்கம் கீழ அடைய வளஞ்சான் தெருவை சேர்ந்தவர் கமல். இவரது மகன் கரிகரன் ( வயது 22) இவர் குடிப்பழக்கம் உடையவர் .இவரது தந்தை கமல் கடந்த 25 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சோகத்தில் இருந்த ஹரிஹரன் அதிக அளவில் குடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் வீட்டு உத்திரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாய் ரதிதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஹரிஹரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.