தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
திருச்சி, செப்.5 உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வையம்பட்டி தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கட்சியின் இரண்டாவது பொது உறுப்பினர்கள் கூட்டம் வையம்பட்டி தனியார் மஹாலில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனைகளும், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 40க்கு 40 வென்றதைப்போல் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெற உழைக்க வேண்டும். அதற்கு கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், உட்கட்டமைப்புகள் குறித்தும் வாக்காளர்களுக்கு எடுத்து கூறி திமுக விற்கு ஆதரவு திரட்ட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினினை துணை முதல்வராக்க வேண்டும், மணப்பாறை தொகுதி மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அமைத்துக்கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு நன்றி தெரிவித்ததும், பொன்னனியார் அணை மற்றும் கண்ணூத்து அணைகளுக்கு மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர் கவிஞர் சல்மா சிறப்புரை ஆற்றினர். இதில் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பன்னப்பட்டி கோவிந்தராஜன், மாவட்ட பொருளாளர் குணசேகரன் மற்றும் சேர்ந்த நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.