கஞ்சா விற்றவர்களை கைது செய்த தனிப்படையினருக்கு எஸ்.பி. பாராட்டு
திருச்சி, ஏப்.15 திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவர்களை கைது செய்த தனிப்படையினரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
திருவெறும்பூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பெல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆம் தேதி திருவெறும்பூர் ஏஎஸ்பி அரவிந்த் பெனாவாத் தனிப்படையினர் பெல் கைலாசபுரம் டவுன்சீப் குடியிருப்பு பகுதியில் குடியிருந்து வரும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஸ்ரீதரன் மகன் நரேஷ் ராஜு (26) என்பவர் கஞ்சா 2.600 கி.கி வைத்திருந்ததாக கைது செய்தனர். டூவீலரும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் 13 ஆம் தேதி காலை துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய தொழில் நுட்ப கல்லூரி அருகே துவாக்குடி காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ், இரண்டு காவலர்களுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்தப்போது 4 கிலோ கஞ்சா வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். விசாரணையில் திருச்சி இரட்டை வாய்க்கால் வாசன் நகரை சேர்ந்த நல்லுசாமி மகன் சதீஷ்குமார் (29), தென்னூரை சேர்ந்த சிராஜுதீன் மகன் முகமது இசாக் (28) என்பது தெரியவந்து. அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்களை பறி முதல் செய்தனர். சிறப்பாக பணி செய்த அதிகாரி மற்றும் ஆளினர்களை ஊக்குவிக்கும் வகையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம் நேற்று மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து பாராட்டி சான்றி தழ்கள் மற்றும் பண வெகுமதி வழங்கினார்.
மேலும், இது போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை. போலி மதுபான விற்பனை, கள் விற்பனை. போதை பொருட் கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மதிமயக்கும் பிற போதை வஸ்துக்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாக தெரிய வந்தால் பொதுமக்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 8939146100 (வாட்ஸ்அப்) மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0431-2333621 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சரியான தகவல் கொடுப்போருக்கு மாவட்ட காவல் அலுவலகம் வரவழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் எனவும். தகவல் கொடுப்போரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.