சிறப்பு தூர்வாரும் பணிகள் : நீர்வளத்துறை அமைச்சர் ஆய்வு
திருச்சி, ஜுன் 9 தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், எல்லக்குடி குவளை வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணியை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப்சக்சேனா, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், நீர்வளத்துறை மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.