கலைக் காவிரி கல்லூரியில் நுகர்வோரின் உரிமையும் பொறுப்புகளும் சிறப்புரை
திருச்சி கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரியில் நுகர்வோர் மன்றம் சார்பில் “நுகர்வோரின் உரிமையும் பொறுப்புகளும்” என்னும் தலைப்பில் தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. பவுல் குணா பங்கேற்று சிறப்புரை வழங்கினார்.
கல்லூரியின் செயலர் அருள்பணி.லூயிஸ் பிரிட்டோ தலைமையில் முதல்வர் முனைவர் ப.நடராஜன் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தன்னார்வ சேவை சங்க கூட்டமைப்பின் செயற்பாட்டாளர்களான R.K.ராஜா, அய்யாரப்பன், பாத்திமா கண்ணன் , எழில் ஏழுமலை, இளங்கோவன், காமகோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் வரவேற்புரையாற்றினார். நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீ.புவனேஷ்வரி நன்றி கூறினார். இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.