பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வெள்ளனூரில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் உயிரிழந்தார்.
புள்ளம்பாடி அருகே இருதயபுரம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் 32 வயதான மணிகண்டன்.இவர் தனது மோட்டார் பைக்கில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது லால்குடி அருகே அரியூர் வடக்கு தெருவை சேர்ந்த 45 வயதான ஜெய் கணேஷ் திருச்சி அரியலூர் தனியார் பேருந்தை ஓட்டிக்கொண்டு பின்னால் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வெள்ளனூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதமாக மோட்டார் பைக் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் தடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்பொருள் ஆய்வுக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.