காட்டுப்புத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
திருச்சி, பிப்.22 திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காட்டுப்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தூய்மை பணியாளர்கள் 15 வார்டுகளிலும் அன்றாடம் குப்பைகளை தரம் பிரித்தும் மற்றும் வடிகால், சாலைப் பகுதிகளில் அன்றாடம் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடைய உடல்நலன் கருதி மாதந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமிற்க்கு காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா, துணைத் தலைவர் சுதா முன்னிலை வகித்தனர் ஆரம்ப சுகாதார மருத்துவர் சுகுமார் செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர் இந்த முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை உள்ளிட்ட அனைத்து ரத்த பரிசோதனை சிறுநீர் பரிசோதனை நடைபெற்றது காட்டுப்புத்தூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் இளநிலை உதவியாளர்கள் ராஜேந்திரன் பாரதியார் சித்ரா வரி தண்டர்கள் சதாசிவம் சர்மிளா தொப்புரவு மேற்பார்வையாளர் பொறுப்பு கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.