முசிறி ஸ்ரீ ஜெயந்திர வித்யாலயா பள்ளி 27 ஆவது ஆண்டு விழா
திருச்சி மாவட்டம் முசிறி ஸ்ரீ ஜெயந்திர வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி 27 வது ஆண்டு விழாவும் ஸ்ரீ ஜெயேந்திரா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி 6ம் ஆண்டு விழாவும் பள்ளி வளாகத்தில் நேற்று (பிப்.5) நடைபெற்றது.
விழாவில் பள்ளித் நிறுவனர் மற்றும் தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். பள்ளி துணைத் தலைவர் சந்தோஷ் குமார், முதல்வர் தினேஷ் குமார் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சதீஸ் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். பள்ளி மாணவ மாணவிகளின் dance, yoga, drama போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் பள்ளி ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.