மாமன்னர் திருமலை நாயக்கரின் 440வது ஜெயந்தி விழா

0 490
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் மாமன்னர் திருமலை நாயக்கர் 440 ஜெயந்தி விழா நேற்று (பிப்.5) நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நாயுடு சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு திருமலை நாயக்கர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்வில் முசிறி நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முசிறியில் மாமன்னர் திருமலை நாயக்கர் சிலை நிறுவ, முசிறி கோட்டாட்சியரிடம் மனு கொடுப்பது மற்றும் காவேரி ஆற்றில் வரும் தண்ணீர் மக்களுக்கு, தண்ணீர் இல்லாத களத்தில் பயன்பெறும் வகையில், முசிறியில் தடுப்பணைகள் கட்ட வேண்டி தமிழக அரசுக்கு சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாயுடு சங்க நகர தலைவர் ராமதாஸ், செயலாளர் ஜனார்த்தனன் சிறப்பாக செய்தனர் இளைஞர் அணி தலைவர் மணிவண்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.