ஸ்ரீ பிடாரி மதுர காளியம்மன் கோவில் புதிய தூக்கு தேர் வெள்ளோட்டம்
திருச்சி, நவ.27 முசிறி அருகே காட்டுப்புத்தூரில் ஸ்ரீ பிடாரி மதுர காளியம்மன் கோவில் புதிய தூக்கு தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது . 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தூக்குத் தேரை தூக்கினர். 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் ஸ்ரீ பிடாரி மதுர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 60 ஆண்டுக்கு மேலாக தூக்கு தேர் இல்லாததால் அப்பகுதி ஊர் பொதுமக்கள் புதிய தூக்கு தேர் செய்து வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற முடிவு செய்தனர்,
நேற்று காலையில் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தும், மாலையில் பூத்தட்டு மேல தாளங்கள் முழங்க முக்கிய வீதிகளில் வெடி த்துக் கொண்டு இளைஞர்கள், பெண்கள் ஆடல் பாடலுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் வந்தடைந்து பூக்களால் தூக்கு தேரில் தலை அலங்காரம் செய்து ஜோடித்து வைத்தனர்,
இன்று காலையில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தூக்குத் தேரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தலையிலும், தோள்பட்டையிலும் தூக்கி கோவிலை சுற்றி வளம் வந்தனர், தொடர்ந்து பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று முழக்கங்களை எழுப்பி தூக்குத் தேரை தூக்கிச் சென்று பக்தர்களும் பின்தொடர்ந்தனர்,
நிகழ்ச்சியில் காட்டுப்புத்தூர், கணபதிபாளையம், சீத்தப்பட்டி, காந்தி நகர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதி பக்தர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தூக்குத்தேர் வெள்ளோட்டம் சிறப்பாக நடைபெற்றது ..
தொடர்ந்து அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.