ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் பணியிட மாற்றம்

0 353
Stalin trichy visit

சென்னை, ஆக.2 அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொது மற்றும் நிருவாக நலன் கருதியும், துறையின் நிருவாக நலன் கருதியும் இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரிந்து வரும் இணை ஆணையர்களை பின்வருமாறு பணியிட மாறுதல் மற்றும் நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது.

அதன்படி திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் இணை ஆணையர் எஸ்.சிவராம்குமார் இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில் இணை ஆணையராகவும், இராமநாதசுவாமி திருக் கோவில் இணை ஆணையர்  செ.மாரியப்பன் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இராமேசுவரம் கோவில் இணை ஆணையரின் நடவடிக்கை கண்டித்து நேற்று முன்தினம் இராமேசுவரம் கோவிலை சுற்றியுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக இந்த பணியிடம் மாற்றம் முக்கியவத்தும் பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.