திருச்சி விமான நிலையத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் வருகை
திருச்சி, செப்.27 த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமைக்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று கரூர், நாமக்கல் பகுதியில் பிரச்சாரம் பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் இன்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் த.வெ.க தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனி விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் ,திருச்சி விமான நிலையத்திலிருந்து வழியாக சாலை மார்க்கமாக No 1 டோல்கேட், முசிறி
விஜய் நாமக்கல் செல்கின்றார்.
விமான நிலையத்திற்கு த.வெ.க.வினர் நுழைந்து விடாமல் தடுக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.