திருச்சி மாநகராட்சி 10, 11-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

0 264
Stalin trichy visit

திருச்சி, செப். 19 திருச்சி மாநகராட்சி 10 மற்றும் 11-வது வார்டுகளுக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உறையூர் நெசவாளர் திருமண மண்டபம் மற்றும் கீரைக்கொல்லை தெரு மைதானத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்வதையும், முகாமின் செயல்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மேயர் அன்பழகன், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உ-றுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.