நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 249
Stalin trichy visit

திருச்சி, செப்.20 திருச்சி மாவட்டம், சிறீரங்கம் எட்டரை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் நேரில் பார்வையிட்டு முகாமின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் சிறீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் எஸ்.குமரவேல், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கோபிநாத், மாவட்ட சுகாதார அலுவலர் ஹேமசந்த் காந்தி, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.