வேளாண் உட்கட்டமைப்பில் கடன் பெறும் திட்டம் குறித்த மாநில அளவிலான மாநாடு: அமைச்சர்கள் பங்கேற்பு
வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் கடன் வசதி பெறும் திட்டம் குறித்த மாநில அளவிலான மாநாட்டை திருச்சிராப்பள்ளி எஸ்.ஆர்.எம்.ஹோட்டல், துவக்கி வைத்தார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கவுரை நிகழ்த்திய இந்நிகழ்வில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் .மா.பிரதீப்குமார், வேளாண் துறை உயர் அலுவலர்கள் நவீன் குப்தா, முனைவர் எம்.லோகநாதன்,அமரேஷ் ஆகியோரும் விவசாய பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள்.