மணப்பாறையில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

0 124
Stalin trichy visit

திருச்சி, செப். 21 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ராமஜெயம் நினைவு அறக்கட்டளை மற்றும் கலைஞர் தமிழ்ச் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மதுரை சாலையில் உள்ள தனியார் திடலில் இன்று மாலை கோலாகலமாக போட்டிகள் துவங்கியது.

இதில் ஆண்கள் பிரிவில் சென்னை எஸ்டிஏடி நியூ கல்லூரி, தஞ்சாவூர் தமிழன்னை, கோவை கற்பகம் யுனிவர்சிட்டி, மணவை ராமஜெயம் கிளப், கோவை பிஎஸ்சி கல்லூரியும் பெண்கள் பிரிவில் சென்னை பனிமலர் கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம் பிகேஆர் கல்லூரி, சென்னை எஸ்டிஏடி கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, சென்னை ஜேப்பியர் கல்லூரி அணிகளும் பங்கேற்கின்றன. ஆண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசாகவும், 2ம் பரிசாக ரூ.40 ஆயிரமும், பெண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ. 30 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ 20 ஆயிரமும் சிறந்த வீரர்களுக்கு தங்க நாணயமும் வழங்கப்பட உள்ளது. இன்று துவங்கிய முதல் போட்டியில் ஆண்கள் பிரிவில் எஸ்டிஏடி கல்லூரியும் – தஞ்சை தமிழன்னை அணிகளும் பெண்கள் பிரிவில் சென்னை ஜேப்பியார் கல்லூரி – கோபி பிகேஆர் கல்லூரி அணிகளும் களமிறங்கி விளையாடினர். இதில் ஆண்கள் பிரிவில் எஸ்டிஏடி கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் ஜேப்பியார் கல்லூரி அணியும் வெற்றி பெற்றன. பேட்டியை ஏராளமான கைப்பந்து ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.