இந்து முன்னணி சார்பில் தெருமுனை பிரச்சாரம்…

0 241
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் டி.கல்விக்குடியில் இந்து முன்னணி சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

டி.கல்விக்குடி கிராமத்தில், லால்குடி புள்ளம்பாடி ஒன்றியம் இந்து முன்னணி சார்பாக இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை வியாபார நோக்கத்தோடு செயல்படும் தமிழக அரசை கண்டித்தும், நமது கோயில் நமது சாமி நாமே கோயில்களை பாதுகாப்போம் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த தெருமுனை பிரச்சாரம டி.கல்விக்குடியில் தொடங்கி புள்ளம்பாடி ஒன்றியமான பளிங்காநத்தம், கல்லகம் சாத்தப்பாடி கல்லக்குடி, ஒரத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த தெருமுனை பிரச்சாரத்தில் லால்குடி ஒன்றிய தலைவர் சதீஷ்குமார் சிறப்புரையாற்றினார். புறநகர் அமைப்பாளர் சரவணன், புறநகர் மாவட்ட செயலாளர் சாமி சண்முகம், செயற்குழு உறுப்பினர் தனவேல் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியாக மூர்த்தி நன்றியுரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.