கலைக்காவிரியில் பயின்று முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள்…
ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் இரண்டாம் பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று தலைமைத் தாங்கி பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழக இணை வேந்தரும், கலைப்பண்பாட்டுத் துறை அமைச்சருமான பெ. சாமிநாதன் மற்றும் துணைவேந்தர் சௌமியா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவில் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியைச் சேர்ந்த இசை மற்றும் நடனத் துறையில் பயின்று முதுகலையில் 47 மாணவர்களும், ஆய்வியல் நிறைஞர் பிரிவில் 11 மாணவர்களும் முனைவர் பட்டப் பிரிவில் 8 மாணவர்களும் பட்டம் பெற்றனர்.
பல்கலைக்கழக அளவில் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்து பட்டம் பெற்ற 14 மாணவர்களில் 8 மாணவர்கள் கலைக்காவிரியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் முதுகலை இசை மற்றும் நடனத்தில் 6 மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்றனர். இளங்கலையில் 5 மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்றனர்.
கலைக்காவிரியில் பயின்று முனைவர் பட்டம் பெற்ற வாய்ப்பாட்டில் 5 மாணவர்கள்
P.அவந்த்ராஜ், M. ராஜேஷ்பாபு, S. ராஜேஷ்வரி, S. மீனாட்சி, R. கிருபாவதி மற்றும் வயலின் துறையில் S. தினேஸ்குமார், மிருதங்கத்தில், F. பிரேம்குமார். பரதநாட்டியத்தில் S. இந்துமதி உள்ளிட்ட மாணவர்களைப் பாராட்டி கல்லூரியின் செயலர் அருள்பணி. லூயிஸ் பிரிட்டோ அடிகளார் மற்றும் முதல்வர் முனைவர். ப. நடராஜன் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.