பள்ளி மாணவர் மீது கொடூர தாக்குதல் : வீடியோ வைரல்

0 376
Stalin trichy visit

திருச்சி, அக். 18 திருச்சி மாவட்டம், மணப்பாறை வையம்பட்டி அருகே உள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் 8 வயது சிறுவனை அதே பள்ளியில் படித்து வரும் மாணவியின் தந்தை வின்சென்ட் ராஜ் என்பவர் பள்ளிக்குள் நுழைந்து சிறுவனை தகாத வார்த்தையில் திட்டியும் காலால் எட்டி உதைத்தும் உள்ளார். அப்போது ஆசிரியை தடுத்தும் சிறுவனை தாக்கியுள்ளார். இந்நிலையில் சிறுவனின் தந்தை அருளப்பன் என்பவர் வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வின்சென்ட் ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த சிறுவனை வின்சென்ட் ராஜ் காலால் உதைத்து தாக்கும் கொடூர வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.