இளைஞரை தாக்கிய உதவி ஆய்வாளர், காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

0 853
Stalin trichy visit

வாலிபரை தாக்கிய எஸ்.ஐ. , மற்றும் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்.

திருச்சி, ஆக.9 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த முகவனூர் அருகே உள்ள பாம்பாட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (23). புகார் சம்பந்தமாக வையம்பட்டி காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்றவரை
எஸ்.ஐ., பிரவின்குமார் மற்றும் காவலர் செந்தில்குமார் ஆகியோர் தாக்கிதால் காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் பாஸ்கரை தாக்கிய எஸ்.ஐ., பிரவின்குமார் மற்றும் காவலர் செந்தில்குமார் ஆகிய இருவரையும் திருச்சி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திருச்சி எஸ்.பி., சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.