ராட்சத கிரேன் வாகனத்தில் திடீர் தீ விபத்து

0 457
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கீழஅரசூர் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் சுமை தூக்கும் ராட்சத கிரேன் வாகனத்தில் திடீரென தீ விபத்து. புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

திருச்சியில் இருந்து அரியலூரில் உள்ள சிமெண்ட் ஃபேக்டரிக்கு 200 டன் சுமை தூக்கும் ராட்சத கிரேன் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது புள்ளம்பாடி அருகே கீழரசூர் திருச்சி சிதம்பரம் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இன்ஜினில் ஏற்பட்ட பழுதினால் திடீரென கிரேன் வாகனம் தீப்பற்றி எரிந்தது. தீவிபத்து ஏற்பட்டவுடன் கிரேன் வாகனத்தின் டிரைவர் கீழே குதித்து உயிர்த் தப்பினார்.இது குறித்து புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு பாரதி தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் சிவக்குமார், வீரர்கள் அமுதகுமார், அசாருதீன், ரமேஷ், குமார், கனகராஜ், அருண்ராஜ், பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தியும் மற்றும் நுரைக் கலவையை பயன்படுத்தியும் தீயை முற்றிலும் அணைத்தனர். தீயணைப்பு்வீர்ர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் சேதங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த தீபத்தால் அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது விரைந்து செயல்பட்ட புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்களை அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டினார்கள். இந்த தீபத்தில் டிரைவர் உட்பட யாரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார்கள்

Leave A Reply

Your email address will not be published.