ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் : நல்லசாமி பேட்டி

0 245
Stalin trichy visit

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது :-

கடந்த அதிமுக ஆட்சியில் மணல் அள்ளுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. மணலுக்கு மாற்றாக எம் சாண்ட், பீ சாண்ட என்று இருந்தது. தற்பொழுது திமுக ஆட்சியில் தாராளமாக, ஏராளமாக மணல் அள்ளி இயற்கை சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு முற்றிலுமாக இந்த அரசு திமுக தடை விதிக்க வேண்டும்.

ஆவின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் இல்லையென்றால் ஆவின் மூடுவிழா காணும்

தமிழகத்தில் அனைத்து பழங்களிலும் இரசாயனம் போட்டு பழுக்க வைக்கும் செயலை தடுக்க வேண்டும். கலப்படம் செய்து பழங்கள் விற்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.