சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

0 401
Stalin trichy visit

திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்துறையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அசோக் குமார் (வயது 25). இவர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஒரு 17 வயது சிறுமியை காதலித்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த 17 வயது சிறுமி கொடுத்த புகாரின்பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து, அசோக்குமாரை கைது செய்தனர். அந்த 17 வயது சிறுமியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.