காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை; பரிதவிக்கும் 3 குழந்தைகள்!

0 350
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா கஞ்ச நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னர்(வயது 27), காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த லாவண்யா(வயது 25) ஆகிய இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் வேலை பார்த்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில்

குடும்பத்தகராறு காரணமாக லாவண்யா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து உடனே துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.