அரசுப் பள்ளிகளுக்கு தளவாட பொருட்கள் வழங்கல்

0 296
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தால் உள்ள கோட்டைபட்டி, வைரம்பட்டி, சொக்கநாதபட்டி, தொட்டியபட்டி உள்ளிட்ட 9 பள்ளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான தளவாட பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழிகாட்டுதலின்படிமாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்  எம்.சி.சிவக்குமாரின் பொது நிதியிலிருந்து சேர், டெஸ்க் உள்ளிட்ட தளவாட பொருட்கள் வழங்கப்பட்டன.இன்று ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று பொருட்கள் வழங்கப்பட்டன.

இதில் திமுக ஒன்றியச் செயலாளர் சி.செல்வராஜ், மருங்காபுரி ஒன்றியக்குழு தலைவர் பழனியாண்டி, ஒன்றியப் பொருளாளர் வி.செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி சேதுராமன்,மகளிரணி அமைப்பாளர் லதா, மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டு தளவாட பொருட்களை வழங்கினார்கள். அரசுப்பள்ளிகளுக்கு தளவாட பொருட்கள் வழங்கியதற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.