கண்காணிப்பு கேமிராக்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்: மாவட்ட எஸ்.பி. பேச்சு

0 50

திருச்சி. நவ. 23 குற்ற செயல்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதாக பிடிக்கவும் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என திருவெறும்பூர் அருகே உள்ள ஜெய் நகரில் ஜெய் நகர் வளர்ச்சி மன்றம் சார்பில் வழங்கப்பட்டுள்ள 32 கண்காணிப்பு கேமராக்களை தொடக்கி வைத்து திருச்சி எஸ்.பி சுஜித் குமார் கூறினார்.
திருவெறும்பூர் பகுதி குற்ற செயல்களின் கூடாரமாகவும், சமூக விரோத செயலக புகலிடமாகவும் உள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த நிலையில் திருவெறும்பூர் பகுதியில் தொடர் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் குற்றங்களை தடுப்பதற்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்கும் ஏதுவாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டுமென காவல்துறை கூறியுள்ளது.அப்படி பொருத்தப்படும் கண்காணிப்பு கேமரா காவலர்களின் மூன்றாவது கண்ணாக செயல்படுவதுடன் குற்றவாளிகளை எளிதாக பிடிப்பதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் விரைவில் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் சூழல் உருவாகும்.இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள ஜெய் நகரில் ஜெய் நகர் வளர்ச்சி மன்றம் சார்பில் 64 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்து முதற்கட்டமாக 32 கண்காணிப்புகேமரா பொருத்தும் விழா நேற்று ஜெய் நகர் வளர்ச்சி மன்றம் உள்ள அரங்கில் நடந்தது.
இவ்விழாவிற்கு கூத்தைப்பார் பேரூராட்சி தலைவரும் கண்காணிப்பு கேமரா செயலாண்மை குழு ஆலோசகரமான செல்வராஜ் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத்தலைவர் பழனியாண்டி, ஜெய் நகர் கண்காணிப்பு கேமரா செயலான்மை குழு மற்றும் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள் சந்திரமோகன், கோவிந்தராஜ், சக்திவேல், தவுலத்கான், மகாலிங்கம், அப்துல்லா ஷெரீப், அல்ஸிண்டார்,கனகராஜ், கவுன்சிலர்கள் கவிதா உண்ணாமலை வெற்றிச்செல்வி அங்காள ஈஸ்வரி சுமதி இளங்கோ சுமித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில்திருச்சி எஸ்பி சுஜித்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜெய் நகரில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராகட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பேசுகையில்,
குற்ற செயல்களை தடுக்கவும் குற்றவாளிகளை எளிதாக பிடிக்கவும் கண்காணிப்பு கேமரா காவல்துறையின் மூன்றாவது கண்ணாக செயல்படுகிறது. இந்த கண்காணிப்பு கேமராவை பொருத்துவதோடு எல்லோரும் விட்டுவிடுகின்றனர். அதனை தொடர்ந்து பராமரிக்காமல் போவதால் அதன் பலன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் கிடைக்காமல் போகிறது. எனவே கண்காணிப்பு கேமராவை நிறுவுபவர்கள் தொடர்ந்து அதனை பராமரிக்க வேண்டும் அப்பொழுது தான் தொடர்ந்து அந்தப் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை தடுப்பதுடன் குற்றவாளிகளை பிடிக்க முடியும்.இந்த பகுதியில் பெரும்பாலும் ஓய்வு பெற்ற பெல் நிறுவன ஊழியர்கள் உள்ளனர் அவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்க முடியாமலோ அல்லது குற்றவாளிகளை பிடிக்க முடியாமலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழந்த பொருட்களை மீட்டு தர முடியாமலும் போனால் நாங்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு கூட நிம்மதியாக இருக்க முடியாது. இந்த பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் என்னை நேரில் அல்லது திருவெறும்பூர் டிஎஸ்பி மூலமாகவோ அணுகுமாறு கேட்டுக் கொண்டார்.
இதில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன், திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார், பொதுமக்கள் ஜெய் நகர் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக வளர்ச்சி மன்ற பொது செயலாளர் ராஜா வரவேற்புரையாற்றினார். அமைப்புச் செயலாளர் மருதமுத்து நன்றி கூறினார். வளர்ச்சி மன்ற தலைவர் தன செல்வமணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!