பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 உர மூட்டைகள் பறிமுதல் : வேளாண்துறை அதிகாரிகள் அதிரடி

0 49

திருச்சி, நவ. 23 திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியை சேர்ந்தவர் முகமது இக்பால். இவர் அதே பகுதியில் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் உரக்கடைகளில் விற்கப்படும் உரங்களின் அளவு மற்றும் வைத்திருக்கும் அளவை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் முகமது இக்பால் அதுக்குறித்த தகவலை அரசிடம் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வேளாண்துறை அதிகாரிகள் திடீரென அவரது குடோனில் சோதனை செய்தபோது 22 டன் எடையுள்ள உர மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் உரு மூட்டை வைத்திருந்தது தொடர்பாக அரசிற்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் பின்னர் அதிகாரிகள் மூன்று லாரிகளில் 22 டன் எடையுள்ள உர மூட்டைகளை பறிமுதல் செய்து தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான குடோனின் வைத்தனர். உரமூட்டைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை வேளாண் துறை அதிகாரிகள் மேற்கொண்டதாக தெரிகிறது. இதன் சந்தை மதிப்பு சுமார் 10 லட்சம் வரை இருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில் 1.25 லட்சம் ரூபாய் தான் விவசாயிக்கு வழங்கப்படுகிறது. ஆனால் பறிமுதல் தொடர்பான அனைத்து தகவல்களையும் வேளாண்துறை அதிகாரிகள் சொல்ல மறுத்து விட்டனர்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!