த.வெ.க. கட்சி நிருவாகிகள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

0 210
Stalin trichy visit

திருச்சி, செப். 9  தமிழக வெற்றிக் கழகம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிப்பட்டதை தொடர்ந்து மற்றும் முதல் மாநாட்டிற்கான இடத்தை தேர்ந்தெடுத்தை யொட்டி விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக்காக கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் நேற்று கொண்டாடினர்.
அந்தவகையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் மண்ணச்சநல்லூர் கடைவீதி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்கள், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரவிசங்கர், வடக்கு மாவட்டம் வழக்கறிஞர் அணி தலைவர் வினேஷ்குமார் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் பங்கேற்றனர். மேலும் நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் ரமேஷ் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.