புதிய கல்குவாரியின் அனுமதியை ரத்து செய்யக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

0 63
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 23  துவரங்குறிச்சி அருகே புதிதாக தொடங்கிய
கல்குவாரியின் அனுமதியை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டம்

துவரங்குறிச்சி அருகே உள்ள மருதம்பட்டியில் 3 கல் குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் புதிதாக மேலும் ஒரு கல்குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள் ளது. இந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்து கல்குவாரி செயல்படாமல் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று சுற்று வட்டார 10 கிராம மக்கள் கடந்த 3 மாதங்களாக அதிகாரிகளி டம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நிலத்தடி நீர்மட்டம் வெகு வாக குறைந்து விட்டதால் ஆழ்குழாய் கிணறுகளில் கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற் /பட்டுள்ளது. விவசாயம் மற் றும் கால்நடை வளர்ப்பு கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கல்குவாரியை திறந்தால் மேலும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி 10 கிரா மங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் கல்லுப்பட் டியில் உள்ள மருங்காபுரி தாசில்தார் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இதனையடுத்து துவரங்கு றிச்சி போலீசார் மற்றும் வரு வாய்த்துறையினர் போராட் டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாத
தால் போராட்டம் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித் தது.

பின்னர் கனிம வளத் துறை தாசில்தார் குணசேக ரன் பொதுமக்களுடன் பேச் சுவார்த்தையில் ஈடுபட்டு குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், தொடர்ந்து குவாரி உள்ள இடத்தினை ஆய்வு செய்த பின்புஅறிக்கை அளிக்கப்படும் என பொது மக்களிடம் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.