கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீட்டில் 10 பவுன் நகை திருடிய பெண் கைது
திருச்சி, ஜூலை 23 கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீட்டில் 10 பவுன் நகையை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்த னர்.
திருச்சி கம்பரசம்பேட்டை காவேரிநகர் பகுதியை சேர்ந்த வர் ஜான். இவருடைய மனைவி ஜெயராணி (வயது 54). இவர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் நேர் முக (வேளாண்மை துறை) உதவியாளராக பணியாற்றி வரு கின்றார். இவர் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக அவரது வீட்டில் பீரோவில் இருந்த நகையை பார்க்காமல் இருந் துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பீரோவை பார்த்தபோது, அதில் இருந்த 10 பவுன் நகை களை காணவில்லை.
இது குறித்து ஜெயராணி ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வீட்டில் வேலைபார்த்த நவ லூர் குட்டப்பட்டு பகுதியை சேர்ந்த குவனேசுவரன் என்பவ ரது மனைவி ரேக்லா (35) என்ப வரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்தான் நகையை திருடியது தெரியவந் தது. இதனையடுத்து போலீ சார் அவரை கைது செய்தனர்.