தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 வடமாநில கொள்ளையர்களுக்கு 6 ஆண்டுகள் சிறை : திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி, ஜூலை 23 வீடு புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 வடமாநில கொள்ளையர்களுக்கு 6 ஆண்டுகள் சிறை : திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செல்வநகர் பொன்னகர் பகுதியில் ஒரு வீட்டில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதியும், கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2022-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி வீட்டினுள் புகுந்து திருடப்பட்டதாக பெறப் பட்ட புகாரின் பேரில் இரு தனித்தனியாக வழக்குப்பதிவு போலீஸ் நிலையங்களிலும் செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்குகளில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, 2 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் பின்னர் இந்த திருட்டு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்தன் (வயது 41), ராம்பிரசாத் என்ற கணேஷ் (26) ஆகிய 2 பேரை செய்தனர்..
இந்த வழக்கை விசாரித்த ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2 மாஜிஸ்தி ரேட்டு பரம்வீர் நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், ராம்பிரசாத் ஆகியோருக்கு ஒவ்வொரு வழக்குக்கும் தலா 3ஆண்டுகள் சிறைதண்டனையும், 2 வழக்கின் தண்டனையை தனித்தனியே 6 ஆண்டுகளாக அனுபவிக்க வேண்டும். ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பாராட்டினார்