காவிரி ஆற்றில் மண்ணுக்குள் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம்
திருச்சி, செப்.24 காவிரி ஆற்றில் மண்ணுக்குள் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாம்பழச்சாலை அருகே காவிரி மண்ணுக்குள் புதைந்து , தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி – அய்யாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிபடி மாணவர்களுக்கான கல்விக்கடனை ரத்துசெய்யாததை கண்டித்தும், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்ககோரியும் விவசாய சங்கதலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.