குயவர் சமுதாயத்திற்கு அதிமுக துணை நிற்கும் : முன்னாள் அமைச்சர் ராஜேந்தி பாலாஜி

0 115
Stalin trichy visit

திருச்சி, பிப். 23  திருச்சி தென்னூர் உழவர் சந்தை பகுதியில் அகில இந்திய குயவர் உரிமை கட்சி முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் உழவர் சமுதாய மாவட்ட ,மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் குயவர் சமுதாயம் சார்பாக வருகின்ற 2026 தேர்தலில் பாஜக கூட்டணி அதிமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.அதிமுக வெற்றி பெற்றால் தான் குயவர் சமுதாயம் முன்னேற்றம் அடையும் என்றனர். மேலும் குயவர் சமுதாயத்திற்கு நல வாரியம் அமைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து தர வேண்டும் என அதிமுக முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது:

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள குயவர் சமுதாய மக்கள் அனைவருக்கும் வணக்கம். உழைக்கும் சமுதாய குயவர் மக்கள்.. திருச்சியில் இந்த மாநாடு ஒரு முயற்சி ஆகும்..குயவர் சமுதாய மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கிறார். உங்கள் சமூகத்திற்கு தேவையான அனைத்து சலுகைகளையும் அதிமுக நிச்சயம் செய்து தரும். மேலும் உங்கள் சமுதாய மக்களுக்கு எப்போதும் அதிமுக துணையாக இருக்கும் என்றார்.

திமுக ஆட்சியில் குயவர் சமுதாய மக்கள் புறக்கணிக்க பட்டுள்ளார்கள்.
திமுகவினர் உங்களை விரட்டி அடிக்கிறார்கள். கார்த்திகை தீபம், பண்டிகை அன்று உங்கள் உழைப்பு இல்லாமல் இருக்காது. உங்கள் கலை, அமெரிக்கவை சேர்ந்தவர்களுக்கு கூட வராது. மண்னை வைத்து உங்கள் கலை பொருட்கள் செய்யும் திறமை, யாருக்கும் வராது.நீங்கள் யாருக்கும் சலைத்தவர்கள் இல்லை.உழைத்து பிழைக்கும் சமுதாயம் குயவர் ஆவார். அதிமுக ஆட்சியில் உங்கள் சமுதாய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக ஆட்சியில் ஒரு பிடி மண்ணுக்கு லஞ்சம் உழைக்கும் சமுதாய மக்களை உறிஞ்சி எடுக்கிறார்கள். உழவர் சமுதாய மக்கள் கவலைப்பட வேண்டாம் அனைத்து சூழ்நிலையிலும் அதிமுக எப்போதும் உக்களுடன் இருக்கும். தொடர்ந்து அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்து உங்கள் சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று போராடுவது தவறு இல்லை.. குறிப்பாக மண் பானை செய்யும் தொழிலை திமுக அரசு முடக்கி உள்ளது.

குறிப்பாக உங்கள் தொழிலை ஒழித்தார்கள்.. ஆனால் இன்று நட்சத்திர ஹோட்டலில் மண் பானை சமயல் என்று விற்பனை செய்து வருகிறார்கள்.
உங்கள் தொழிலை யாராலும் தடுக்க முடியாது. எப்போதும் அதிமுக , குயவர் சங்கத்துடன் இருப்போம். அனைத்து சலுகையும் அதிமுக செய்து தரும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.